குறிக்குத் தப்பு

அடித்துப் பிடித்துப் புறப்படு
முட்டி மோதி முன்னேறு
உரசல் கிரசலில் நெளியாதே
ஆணென்றும் பெண் என்றும் பாராதே
நொடியில் மரணமென்றாலும்
படியிலும் பயணம் செய்
ஏனெனில்
தாமதம் என்ற துப்பாக்கி
உன்னை நோக்கியே
குறிபார்த்திருக்கும்
குறிக்குத் தப்பு

1 பின்னூட்டம் இதுவரை

  1. ராஜம்ரகு on ஆகஸ்ட் 6, 2007

    ஆக ரயிலை விட்டுக் கீழே இறங்கியாச்சு!

Leave a reply