கொஞ்சம் இரை-உரப்புளி நா.ஜெயராமன்

தண்டவாளங்கள் தடதடக்க
நிமிஷ நேரத்தில்
நிலையங்கள் கடக்க
நொடிக் கணக்கில்
பயணிகளைக் கக்கிவிட்டு
கக்கிய வேகத்தில்
வாரியும் விழுங்கிக்கொண்டு
விரையும் மின்சார ரயில்
இடிபாடுக்கிடையே
ஈயுங்கள் என இழையும்
புல்லாங்குழலுக்கும்
தட்டுங்கள் திறக்கப்படும்களுக்கும்
முருகா உருகாதாக்களுக்கும்
பார்மகளே பார்களுக்கும்
கொஞ்சம் இரை போட்டுச்செல்லும்

2 comments so far

  1. ராஜம்ரகு on

    ப்ரமாதம். தூள் கிளப்ப ஆரம்பிச்சுட்டீங்க! அது சரி ! சுற்றிச் சுற்றி ரயில்தான் நிலைக்களமா

  2. balakarthikeyan on

    idi padukalukkitail irai thedum ithayangalum iruppatharkku ikkavithaiyum or sandru


Leave a reply